Ads

Friday, March 22, 2013

மாணவர்களின் போராட்டத்தில் நடிகர் சிலம்பரசன் பங்கேற்பு

மாணவர்களின் போராட்டத்தில் நடிகர் சிலம்பரசன் பங்கேற்பு

தமிழகபெங்கும் மாணவர்களால் நடத்தப்பட்டுவரும் போராட்டங்களில் இதுவரையில் தமிழ் அமைப்புக்களும், கட்சிகளும் பொது மக்களுமே பங்குகொண்டிருந்த நிலையில் இன்று நடிகர் சிலம்பரசனும் மாணவர் போராட்டத்தில் இணைந்தார்.

இந்த உணர்வு,மாணவர்களாலும்,இளைஞர்களாலும் வாழ்ந்துகொண்டிருக்கிற ஒவ்வொரு நடிகனுக்கும்,சினிமா துறை சார்ந்தவருக்கும் வரவேண்டும்.

மாணவர் போராட்டம் வெல்லட்டும்.ஈழம் ஒன்றே இலக்கு.

இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் சிம்புவும் மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நேற்று சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் பந்தலுக்கு சென்ற சிம்பு, அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, மனதை தளரவிடாமல் தைரியமாக இருங்கள் என ஆறுதலும் கூறியுள்ளார்.

மாணவர்களிடையே சிம்பு பேசியபோது, ‘நானும் ஒரு தமிழ் பையன்தான். எனக்கும் தமிழுணர்வு இருக்கிறது என்பதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறேன். மற்றவர்கள் முன்னாடி பேர் வாங்கணும் என்பதற்காக நான் இங்கு வரவில்லை. அந்த பேரை நான் நன்றாக சம்பாதித்து வைத்திருக்கிறேன்.

மாணவர்கள் என்றால் படம் பார்ப்போம், ஜாலியாக இருப்போம், நல்லா சுத்துவோம் என்கிற கருத்துதான் சமுதாயத்தில் இருக்கிறது. ஒரு முக்கியமான விஷயத்துக்கு மாணவர்களாலும் குரல் கொடுக்கமுடியும் என்று சொல்லும் அளவுக்கு நீங்கள் எல்லாம் இந்த போராட்டத்தில் களமிறங்கியுள்ளது சந்தோஷமாக உள்ளது.

எனவே, நானும் ஒரு தமிழனா இருந்து உங்கள் எல்லோருக்கும் ஆதரவா இருக்கணும் என்பதற்காகத்தான் இங்கு வந்தேன். ஆகவே, மனதை தளரவிடாதீர்கள். கண்டிப்பா ஒரு நல்ல விஷயம் நடக்கும்னு நினைக்கிறேன். சின்னதா நடக்குற ஒரு விஷயம்தான் நாளைக்கு பெரிசா மாறும். என்னுடைய ஆதரவு உங்களுக்கு என்றைக்குமே உண்டு. தைரியமாக இருங்கள்’’என்று தெரிவித்தார்.

புலன் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் உயிர் மூச்சு நடிகர்கள் எவரும் பாலகனுக்காவாவது வாய்திறக்கவில்லை ?

No comments:

Post a Comment

ads