Ads

Friday, March 22, 2013

தோழர் ஈ.வெ.ரா விடுதலை, 29.05.1950

"நம் மக்களை ஒழித்துக் கட்டவேண்டும் என்று வடநாட்டார்கள் முனைந்து வேலை செய்கிறார்கள். அவர்கள் உத்தரவினால் தான் இன்று நம்மவர்களை நீச்சன்களென்றும், கம்யூனிஸ்ட்கள் என்றும் கொடுமைப்படுத்துகிறார்கள். போலீஸ்காரர்கள் கொடுமை, அக்கிரமம் செய்கிறார்களென்றால் எங்கே செய்கிறார்கள்? சேரியில்தானே, நம்மவர்கள் வாழும் இடங்களில் தானே, அக்ரகாரத்திலேயா போய்ச் செய்கிறார்கள்? செய்வார்களா? அங்கு போனால் போலீஸ்காரனின் தடியிலும், கையிலும் நெருப்புப் பிடித்துக் கொள்ளாதா?

இந்த மாதிரி ஒரு பார்ப்பான் பெண் கற்பை 5- போலீசார் அழித்திருக்கட்டும். அப்போது ஊரே கேளு, நாடே கேளு என்று கூக்குரல் எழுப்பி அந்த போலீஸ்காரர்களின் வேலைக்கே உலக வைத்துவிட மாட்டார்களா? அந்த அளவுக்கு இன்று அந்த சாதியாருக்குச் செல்வாக்கு இருக்கிறது.

இன்னும் நமக்குப் பல துன்பங்கள் வரலாம். நம்மவர்களின் கை, கால்கள் ஒடிக்கப்படலாம்; நம் குடும்பங்கள் கதறலாம்; நம் உயிர் போகலாம். ஆனால் இத்தனைக்கும் நாம் தயாராக இருந்து கொண்டு இழிவொழிக்கும் இந்தப் பணிபுரிய உறுதி கொள்வோம்.

- தோழர் ஈ.வெ.ரா
('விடுதலை', 29.05.1950)

No comments:

Post a Comment

ads