Ads

Friday, March 22, 2013

தோழர் ஈ.வெ.ரா ( விடுதலை, 05.04.1950 )

இன்று இருப்பது நமது ஆட்சியா? அல்லவே அல்ல. 47-ஆகஸ்ட் 14-வரை வெள்ளையன் இருந்தான். 15-ஆம் தேதியிருந்து நம் ஆட்சி என்று பிரசாரம் செய்கிறார்கள். நான் சொல்வேன்; 'இது நம் ஆட்சியல்ல, வடநாட்டார் ஆட்சிதான் இன்று நடைபெறுவது' என்று. 

வெள்ளைக்காரன் தனது சவுகரியத்துக்காக இந்தியா என்று பல நாட்டை ஒன்றாக்கி ஆண்டான். நம்முடைய பழக்கவழக்கங்கள் வேறு, வடநாட்டாராகிய அவர்கள் பழக்க வழக்கங்கள் வேறு, நம் கலை வேறு, அவர்கள் கலை வேறு, நம் பண்பு வேறு, அவர்கள் பண்பு வேறு.

இப்படியிருக்கிற இரண்டையும் ஒரு நாடாக்கி அதிலே வடக்கத்தியாரே ஆண்டு கொண்டிருப்பது என்பது எந்தவிதத்தில் நியாயம் ஆகும்?

- தோழர் ஈ.வெ.ரா
('விடுதலை', 05.04.1950)

No comments:

Post a Comment

ads