அதிகாரம் 38 : ஊழ்
அதிகாரம் 38 : ஊழ்
ஆகூழாற் றோன்று மசைவின்மை கைப்பொருள்
போகூழாற் றோன்று மடி. [371]
பேதைப் படுக்கு மிழவூ ழறிவகற்று
மாகலூ ழுற்றக் கடை. [372]
நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்தன்
னுண்மை யறிவே மிகும். [373]
இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. [374]
நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவு
நல்லவாஞ் செல்லவஞ் செயற்கு. [375]
பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்
சொரியினும் போகா தம. [376]
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது. [377]
துறப்பார்மற் றுப்புர வில்லா ருறற்பால
வூட்டா கழியு மெனின். [378]
நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கால்
அல்லற் படுவ தெவன். [379]
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். [380]
No comments:
Post a Comment